பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பணத்தை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் - தயாசிறி..! - Sri Lanka Muslim

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பணத்தை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் – தயாசிறி..!

Contributors

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட பணத்தை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பண்டோரா டொலர்களை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அது டொலர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாகும் என்றும் தயாசிறி தெரிவித்தார்.

இலங்கையில் டொலர் பற்றாக்குறை இருக்கும் சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு நாணயத்தாள்களைக் கொண்டு வருவது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட டொலர்களின் தொகையை இலங்கைக்குத் கொண்டு வந்தால் மிகவும் நல்லது என்றும் இது தொடர்பாக உடனடியாக விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பண்டோரா வெளிப்பாடுகள் குறித்த ஊடகவி யலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team