பண்டோரா பேப்பர் குறித்த ஓடியோ சாட்சியம் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருக்கிறது - திலீப் வெதராச்சி..! - Sri Lanka Muslim

பண்டோரா பேப்பர் குறித்த ஓடியோ சாட்சியம் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருக்கிறது – திலீப் வெதராச்சி..!

Contributors

நாட்டில் அண்மையில் வெளியான பண்டோரா பேப்பரி லுள்ள குற்றச் சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி தெரிவித் துள்ளார்.

பண்டோரா வெளிப்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதா ரங்களை முன்வைக்கத் தேவையான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித் துள்ளார்.

எனவே, முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை சாட்சிக்காக கட்டாயமாக அழைக்க வேண்டும் என்று தான் கோட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பண்டோரா வெளிப்பாடுகள் குறித்த ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அது தொடர்பான ஓடியோ பதிவுகள் தன்னிடம் இருப்பதாகவும் ராமநாயக்க கூறியதாக அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று ரஞ்சன் ராமநாயக்கவிடம் நலன் விசாரித்த பின்னர் திலீப் வெதராச்சி ஊடகங் களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team