பண்றியின் இறைச்சியை சாப்பிடுவது மட்டும்தான் ஹராமா ...? » Sri Lanka Muslim

பண்றியின் இறைச்சியை சாப்பிடுவது மட்டும்தான் ஹராமா …?

hel

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இந்த தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வைசர் சாய்ந்தமருது முஸ்லிம் கடை ஒன்றில் வாங்கினேன் விலை ரூபா550/-
இதே பொருள் அம்பாரையில் சிங்கள சகோதரர் ஒருவரின் கடையில் வாங்கினேன் விலை ரூபா 240/-

இஸ்லாம் என்று சொன்னால் மட்டும் போதாது உண்மையான இஸ்லாமியனாக வாழ்ந்து காட்ட வேண்டும் பண்றியின் இறைச்சியை சாப்பிடுவது மட்டும்தான் ஹராம் என்று நினைக்கக்கூடாது.

மாறாக சிறிய முதலீட்டை செய்து அதில் ஏகப்பட்ட பொய்களை சொல்லி அதிக இலாபம் பெறுவதும் ஹராம்தான் முஸ்லிம்கள் சரியான பாதையில் செல்வார்களானால் எந்தவித நாசமும் ஏற்படாது.

அதிகமான முஸ்லிம் வியாபாரிகளிடம் பொய்தான் ஏராளமாக காணப்படுகின்றது இப்படி பொய் சொல்லி சொல்லி உழைத்து கடைசியில் ஒரு பெண் பிள்ளைக்கு மாடி வீட்டை கட்டி பொய்யால் உழைத்து பணத்தில் சீதனத்தையும் கொடுத்து மாப்பிள்ளையும் எடுத்து கடைசியில் மருமகன் வரும் நேரம் பார்த்து வாசல் கதவை ஓடிப்போய் திறந்து வீட்டுக்கு காவலனாகின்றார். கரையான் கஸ்டப்பட்டு புற்றுக்கட்டுமாம் அதற்குப் பெயர் பாம்பு புற்று.

திருகோணமலையில் முஸ்லிம் ஹோட்டல் அரை வேக்காட்டு புரியானி ஒன்றின் விலை ரூபா 350/- ஹுன்னஸ்கிரியவில் முஸ்லிம் கடை ஒவ்வொரு சாதாரண சாப்பாட்டிற்கும் ஒவ்வொரு விலை அதே ஊரில் சிங்கள கடை சாப்பிடச்சென்றால் அங்கிருக்கும் அனைத்து கறிகளுடனும் சாப்பிடலாம் விலை ரூபா 150/- மட்டும். யாழ்பாணத்தில் முஸ்லிம் கடை பரோட்டா 15, பருப்புக்கறி தேங்காய் சம்பல் கொஞ்சம், 15 சிறிய பருப்பு வடை இவ்வளவுக்கும் ரூபா 1320/- . அனுராதபுரத்தில் சிங்கள கடை 30ஆப்ப 15தேனீர் குழந்தைகளுக்கு டிப்பி பக்கட் 5 டொபி20 இவ்வளவுக்கும் ரூபா 430/- இப்படியாக இந்த நாட்டில் ஏராளமான முஸ்லிம் வியாபார சித்திரவதைகள்.

முஸ்லிம்களுக்கு அபிலாசைகள் அதிகம் சம்மாந்துறையில் மோட்டார் சைக்கிள் வியாபாரி ஒருவரிடம் 2013ம் ஆண்டு CD DULAX ஒன்றை விற்றேன் ஒரே நாளில் அவர் அதை இன்னொருவருக்கு 20000/- இலாபத்தில் விற்றுள்ளார் அதை வாங்கியவர் என்னிடம் சொல்லி தெரிந்து கொண்டேன். மனமும் உருகியது பொட்டிக்கடை வைத்தாலும் கார், பங்களா என்றெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எமது முஸ்லிம்கள் இப்படி கேவலமான, அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற முறையில் சம்பாதிப்பவைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்தேயாகுவான்.

ஒரு கிலோ கிளவள் மீனை கடற்கரையில் ரூபா 300/- படி வாங்கி சம்மாந்துறைக்கு கொண்டு வந்து 1000/- க்கு விற்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தில் எரிபொருள் விலை அதிகரித்திருந்தது அந்த நாட்களில் சம்மாந்துறையில இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் சென்று ஊர் திரும்புவதற்கு வேன் ஒன்றின் ஹயர் கூலி 17000/- சாரதியின் சம்பளம் 3000/- இந்த அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்தும் வாகன உரிமையாளர்கள் அதே கூலிதான் கேட்கின்றார்கள். சிலர் அதைவிடவும் அதிகமாக கேட்கின்றார்கள் இது என்ன நியாயம்? நேர்மை, நியாயம், மனசாட்சி, உண்மை, இறையச்சம் இவை எதுவும் முஸ்லிம்களின் வியாபாரத்தில் இல்லை இலங்கையில் முஸ்லிம்கள் அழிவுப்பாதைக்கு அண்மையில் வந்துவிட்டார்கள் நிச்சயமாக அல்லாஹ் அழித்தே தீருவான்.

Web Design by The Design Lanka