பதவியை இராஜினாமா செய்யவில்லை - ஹிஸ்புல்லாஹ் விளக்கம் » Sri Lanka Muslim

பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

hisbul4

Contributors
author image

Press Release

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நான் இராஜாங்க அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.

அதேவேளை, மட்டக்களப்பு கெம்பஸ் விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்காக வேண்டி மலேசியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளேன்.

அதேவேளை, இராஜாங்க அமைச்சர்களது பதவிகள் – அதிகாரங்கள் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று சகல இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இந்தக் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களது அதிகாரங்கள் தொடர்பில் ஒருவார காலத்துக்குள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளனர். இது தவிரவேறு எந்தவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by The Design Lanka