பதவி இழப்பாரா பவித்ரா..? புதிய சுகாதார அமைச்சராக Dr ரமேஷ் பத்திரண…?? - Sri Lanka Muslim

பதவி இழப்பாரா பவித்ரா..? புதிய சுகாதார அமைச்சராக Dr ரமேஷ் பத்திரண…??

Contributors

பவித்ரா வன்னியாராச்சி தனது சுகாதார அமைச்சர் பதவியை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் என்ற முறையில் கோவிட் தொற்றுநோய்க்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி திறமையற்றவர் என்பதை அரச அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team