பதினாறு வயது பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு.15 வயது மாணவர்கள் இருவர் கைது . - Sri Lanka Muslim

பதினாறு வயது பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு.
15 வயது மாணவர்கள் இருவர் கைது .

Contributors

பதினாறு வயது பாடசாலை சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும்

15 வயது மாணவர்கள் இருவரை கடந்த 24 ம் திகதி கைது செய்துள்ளதாக கெக்கிராவ பொலிசார் தெரிவித்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களாவர்.சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இரு மாணவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.சம வயதுடைய அதே பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமியின் காதலன் என கூறப்படும் ஒரு மாணவனுடன் சிறுமி வகுப்பறையில் தனியாக உறையாடிக் கொண்டிருந்த வேளையில் சந்தேக நபர்களான மாணவர்கள் இருவரும் தங்களின் கையடக்க தொலைபேசி மூலம் அந்த சிறுமியை படம் எடுத்துள்ளனர். பின்னர் அதனை சிறுமியிடம் காட்டி பாடசாலை அதிபருக்கும் பெற்றோரோருக்கும் காட்டுவதாக கூறி அச்சுறுத்தி சிறுமியைஅழைத்துச் சென்றுள்ளதாகவும் அந்தப் பயணத்தில் மற்றய சந்தேக நபரும் இணைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.குறித்த வீட்டில் சந்தேக நபர்கள் இருவரும் சிறுமியை கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.சந்தேக நபர்களான இரு மாணவர்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team