பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் -வடிவேல் சுரேஷே் - Sri Lanka Muslim

பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் -வடிவேல் சுரேஷே்

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷே் தெரிவித்துள்ளார்.

 

பண்டாரவளையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கோர விபத்துச் சம்பவத்தை அடுத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் எதிரிகளின் கூட்டு செந்தில் தொண்டமானைக் கொல்ல சதி செய்துள்ளதாக குற்றம் சுமத்தினார்.

 

இந்த நிலையில் ஆளும் கட்சியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிரான தரப்பு இந்த சதியை செய்துள்ளதாக பதுளை மாவட்டத்தில் பிரச்சாரம் ஒன்று கொண்டு செல்லப்படுவதாக தெரியவருகிறது

.

இந்த விபத்தின் மூலம் அனுதாப வாக்குகளைப் பெற சிலர் முயற்வித்து வருவதாக தெரியவந்துள்ளது.

 

இவ்விபத்து குறித்து வடிவேல் சுரேஷே் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளதாவது,

 

´பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆரம்பித்த காலங்களிலிருந்து நாம் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதில் கவனமாக ஈடுபட்டு வந்தோம். தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக விஷம பிரச்சாரங்கள் எனது வெற்றியை தடுப்பதற்கான கூட்டு சதி என்றே கருதுகிறேன். எனவே மக்கள் அனைவரும் உண்மை நிலவரத்தை அறிந்து எனது வெற்றிக்கான முழு ஆதரவினையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.´ – இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சுரேஸ் வடிவேல் 2008ல் அமைச்சர் ஆறுமுகம்தொண்டமானின் பிரத்தியோக செயலாளராக பணியாற்றி அதன் பின் தொண்டமானின் கட்சியில் பாராளுமன்ற உறுப்பிணராக தெரிவுசெய்யப்பட்டார். அவர் அரசின் பக்கம் மாறி பிரதி சுகாதார அமைச்சராக பணியாற்றினார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்  ஸ்ரீ.ல.சுகட்சி சார்பில் போட்டியிட்டு தோல்விகண்டார்.இம்முறை ஊவா தேர்தலில் நிமல் சிறிபால சில்வாவின் அழைப்பின்பேரில் ஸ்ரீ.ல.சு.கட்சியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

 

பண்டாரவளை விபத்து ஒரு சதி என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team