பதுளை மாவட்ட முஸ்லிம்களின் அரசியலில் மாற்றம் தேவை - Sri Lanka Muslim

பதுளை மாவட்ட முஸ்லிம்களின் அரசியலில் மாற்றம் தேவை

Contributors
author image

Dr. Inamullah Masihudeen

UVA PC Election 2014 :
Badulla District : UPFA 9,. UNP 8, JVP 1 – Hakeem + Rishad = DUA 0
Moneragala District : UPFA 8 seats, UNP, 5, JVP 1

 

2014 ஊவா மாகாண சபைக்கான தேர்தல் : பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள், ஆளும் ஐக்கிய முன்னணி ஒன்பது ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி எட்டு ஆசனங்கள், ஜே வீ பீ ஒரு ஆசனம், ஹகீம் ரிஷாத் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெறவில்லை.

 

மொனராகல மாவட்டம், ஆளும் ஐக்கிய முன்னணி எட்டு ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி ஐந்து ஆசனங்கள், ஜே வீ பி ஒரு ஆசனம்.

 

முழு அரச யந்திரமும் ஊவா மாகாணத்தில் குவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி அடைந்துள்ள கடுகதி (உடரட்ட மெனிக்கே) மாற்றம் தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பிரதிபலிக்கின்றன.

 

எதிர்கால தேசிய அரசியலில் ஜே வீபி தீர்மானிக்கும் சக்தியாக வருவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதனையும் மேற்படி முடிவுகள் உணர்த்துகின்றன.

 

பதுளை மாவட்ட முஸ்லிம்கள் மொத்த தேசிய அரசியலிலும் அதே போன்று முஸ்லிம் அரசியலிலும் நல்லாட்சி விழுமியங்களுடனான, முஸ்லிம்களது உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற முழுமையான ஒரு மாற்றம் தேவை என்பதனை மிகவும் தெளிவாக சொல்லியுள்ளதனை, முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஏனைய தரப்புக்களும் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team