பந்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது: டுபிளசி - Sri Lanka Muslim

பந்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது: டுபிளசி

Contributors

பந்தை நான் சேதப்படுத்தவில்லை, மக்கள் மோசடிக்காரன் என சொல்வதை கேட்டால் வருத்தமாக உள்ளது என தென் ஆப்ரிக்காவின் டுபிளசி தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் டுபிளசி, பந்தை பேன்ட் ஜிப்பின் மீது தேய்த்து சேதப்படுத்தியதாக நடுவர்கள் புகார் கூறினர்.

இதற்காக போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதம் டுபிளசிக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து டுபிளசி கூறுகையில், நான் ஒரு நேர்மையான வீரர் என்பது எனக்கு தெரியும்.

மக்கள் மோசடிக்காரன் என சொல்வதைக் கேட்டால் வருத்தமாக உள்ளது.

தற்போது பந்தை யாராவது என் மீது எறிந்தால் கூட அதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

போட்டியின் போது பந்தை விதிக்குட்பட்டுதான் கையாண்டேன், களத்திலிருந்த நடுவர் கூட பந்தை பரிசோதித்தார்.

தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை, ஆனால் இச்சம்பவத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team