பனியில் சிக்கிய காரை தள்ளி நகர்த்த உதவிய ஜோர்தான் மன்னர் அப்துல்லா - Sri Lanka Muslim

பனியில் சிக்கிய காரை தள்ளி நகர்த்த உதவிய ஜோர்தான் மன்னர் அப்துல்லா –

Contributors

 

ஜோர்தானில் பனியில் சிக்கிய காரொன்றை தள்ளி அதை அங்கிருந்து நகர்த்துவதற்கு அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அல் ஹுஸைனும் நேரடியாக உதவியை பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஜோர்தான் தலைநகர் அமானிலுள்ள வீதியொன்றில் கடந்த வெள்ளி சனி தினங்களில் கடுமையான பனி பெய்தது. இதன்போது ஒரு குடும்பத்தின் கார் பனியில் சிக்கிக்கொண்டதால் காரை அங்கிருந்து நகர்த்துவதற்கு அக்குடும்பத்தினர் சிரமப்பட்டனர்.

இதை அவதானித்து அக்குடும்பத்தினருக்கு உதவ அங்கிருந்த பலர் விரைந்தனர். அவர்களில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவும் இருந்தமை பலரை வியக்கவைத்தது. பனிப்பொழிவின்பின் வீதிகள் துப்புரவாக்கப்படுவதை அவதானிப்பதற்காக அப்பகுதிக்கு மன்னர் அப்துல்லா சென்றிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்காட்சியை அவ்வழியே சென்ற ஒருவர் படம்பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்

 

Web Design by Srilanka Muslims Web Team