பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் கையளிப்பு - Sri Lanka Muslim

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் கையளிப்பு

Contributors

-ஹாசிப் யாஸீன்

 

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் இவ்வாண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் மஜீட்புரம் வித்தியாலயத்திற்கும், 75 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட அலுவலக தளபாடங்கள் மஜீட்புரம் ஹூஸ்னுல் மாஅப் பவுண்டேசன் அமைப்பிற்கும் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (28) மஜீட்புரம் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

 

பாடசாலை அதிபர் வை.பி.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் உபகரணங்களை கையளித்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.அன்வர்;, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா  உள்ளிட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

23

 

18

 

19

 

20

 

21

 

22

 

 

Web Design by Srilanka Muslims Web Team