பம்பைமடுவில் 400 மாணவிகளுடன் முடக்கப்பட்ட தங்கும் விடுதி! - Sri Lanka Muslim

பம்பைமடுவில் 400 மாணவிகளுடன் முடக்கப்பட்ட தங்கும் விடுதி!

Contributors

வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்கும் விடுதி தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி விடுமுறையில் சென்று மீண்டும் பல்கலைகழகம் திரும்பியநிலையில் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவி கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியின் ஒருபகுதி சுமார் 400 மாணவர்களுடன் இன்றுமுதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளிச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அவர்களிற்கு கட்டம், கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team