பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றுமோர் வர்த்தமானி வெளியானது..! - Sri Lanka Muslim

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றுமோர் வர்த்தமானி வெளியானது..!

Contributors

பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு தடுப்புக்காவல் என்று பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின், பிரிவு 9இன் கீழ் இந்த வர்த்தமானி 2021, ஜூன் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

1979, எண் 48, பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9வது பிரிவின் கீழ், அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வளாகங்கள் நோக்கங்களுக்காக தடுப்புக்காவலாக இருக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பதாக இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களை தடுத்து வைக்க பயன்படுத்தப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team