பயங்கரவாத விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யபட்ட மாவனெல்ல பகுதி நபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது. - Sri Lanka Muslim

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யபட்ட மாவனெல்ல பகுதி நபரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டது.

Contributors

நாட்டில் அடிப்படை வாதத்தை பரப்புவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வெலிகம பகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 27 லட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.


மாவனெல்ல பகுதியை சேர்ந்த 42 வயதான குறித்த சந்தேகநபர் கடந்த 12ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.



நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்புதல், நிதி வழங்கல், நிதி சேகரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.



சந்தேகநபர் ஜமாதே இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவர் என தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.



சந்தேகநபர் தற்போது பயங்கரவாத விசாரணை பிரிவினரால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team