பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து பல வாரங்களின் பின்னே தீர்மானிக்கப்படும்..! - Sri Lanka Muslim

பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து பல வாரங்களின் பின்னே தீர்மானிக்கப்படும்..!

Contributors

தனிமைப்படுத்தல் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கையில்,

தற்போது நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு 10 நாட்களின் பின்னர் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் 14 நாட்களின் பின்னர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதன் ஊடாக நாட்டின் நிலைமையை அவதானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team