பரவிபாஞ்சான் குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி - Sri Lanka Muslim

பரவிபாஞ்சான் குளத்தில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

Contributors

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் பரவிபாஞ்சான் குளத்தில் நீறாட சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூழ்கிய இரண்டு சிறுவர்களும் மிட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

முள்ளிப்பொத்தானை – ஈச்சநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன், தம்பலகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team