பராசக்தி பாணியில் ஒரு பாவி ரசிகன் » Sri Lanka Muslim

பராசக்தி பாணியில் ஒரு பாவி ரசிகன்

cri66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


கிரிக்கட் விசித்திரம் நிறைந்த பல ரசிகர்களை சந்தித்திருகின்றது.
fbயிலே சர்வ சாதாரணமாக தென்படும ஜீவன்தான் ரசிகன்.

திசர பெரேராவைத் திட்டினான்.
டீவியைத் தாக்கினான்.
குற்றம் சாட்ட பட்டிருக்கிறான். இப்படியெல்லாம்.

நீங்கள் எதிர்பார்பீர்கள் அவன் இதை எல்லாம் மறுக்க போகிறான் என்று.
இல்லை. நிச்சயமாக இல்லை.

திசர பெரேராவைத் திட்டினான்.
திசர கூடாதென்பதற்காக அல்ல.

சிங்கம் அசிங்கமாக அலையக் கூடாதென்பதற்காக.

டீவியைத் தாக்கினான்.
அது சைனா டீவி என்பதற்காக அல்ல.
கோலி கோழிபோல் சுருண்டு விட்டதை கண்டிப்பதற்காக.

அவனுக்கேன் இவ்வளவு அக்கறை.
உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.

அவனே பாதிக்க பட்டான்
நேரடியாக பாதிக்க பட்டான்.
கிழங்குப் பார்சலுக்காக பெட் கட்டினான்
சுயநலம் என்பீர்கள்.
அவன் சுயநலத்திலே பொதுநலமும் கலந்த்திருகின்றது.

கிரிக்கட் போலைத் தேய்த்து ட்ரவுஸரை சுத்தப்படுத்துகிறானே போளர் அதைப்போல.

ரசிகனைக் குற்றவாளி என்கிறார்களே.
இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள போஸ்ட்கள், கொமண்ட்கள், blockகள் எவ்வளவு என்று தெரியும்.

கேளுங்கள் அவன் கதையை.

fbயிலே சொந்த ஐடியில் இருந்தவன் அவன்.
போஸ்ட் போட ஒரு ஐடி
கொமண்ட் எழுத ஒரு ஐடி.

fbயின் தலையெழுத்துக்கு அவன் விதிவிலக்கா?

லைக்ஸ் அவன் ஐடியை வளர்த்தது.
பிரபலம் ஆக்கியது.

கப் தூக்க இருக்கும் தன் டீமை காண வந்தான்

பிசாசு போல் விளையாடி உங்கள் முன்னால் கப் தூக்கி நிற்கிறானே இதோ இந்த பச்சைக் காரன்.

அவனுக்கெதிராய் வலையிலே எழுதியவர்களில் அவனும் ஒருவன்.

கப்பைப் பறி கொடுத்தான்
கவலையால் திரிந்தான்

கடைசியில் பேக் ஐடியாக மாறினான்
காண வந்த கப்பைக் கண்டான் பச்சையின் கைகளிலே
ஆம்.
தோற்றுப் போய் விட்டார்.

அணியின் பெயரோ இந்’தீ’யா.
நெருப்பான பெயர்.

ஆனால் பெட்டிங்கில் பருப்பும் இல்லை.

பைனலுக்கு வந்த டீம் சொதப்பி விட்டது.
கையிலே தோல்வி
கண்ணிலே பயம்.

ஸ்கோர் அவன் டீமை மிரட்டியது.
பயந்து ஓடினார்.

விக்கட் அவன் அணியை வீழ்த்தியது
மீண்டும் ஓடினார்.

பீல்டிங் அவன் டீமை பயமுறுத்தியது.
ஓடினார்
ஓடினார்
ட்ரஸ்சிங் ரூமுக்கே ஓடினார்.

அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்.
வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்
இன்று குற்றம் சுமத்துவோர் போடுவோர்.
செய்தார்களா.
திசர் பெரேராவை திட்டியது ஒரு குற்றம்.
அவன் டீவியைத் தாக்கியது ஒரு குற்றம்.
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்
யார்?
யார் காரணம்?
டீமை ஸ்கோருக்கு வழி இல்லாததாக அலையவிட்டது யார் குற்றம்.
பெட்ஸ்மேனின் குற்றமா? அல்லது பெட்டிங்கைச் சொல்லி பீல்டிங்கில் கோட்டை விட்ட வீணர்கள் குற்றமா?

போஸ்ட் போடும் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?

fbயின் குற்றமா?

அல்லது போஸ்ட்டுக்கு லைக் போடும் போராளியின் குற்றமா?

இந்த தோல்விகள் களையப்படும் வரை போராளிகளும் போஸ்ட்களும் குறைய போவதில்லை.

இதுதான் எங்கள் கிரிக்கட் ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள கிரிக்கட் தத்துவம்.

Web Design by The Design Lanka