பரீட்சை கடமையில் ஈடுபடச் சென்ற அதிபர் திடீர் மரணம் - Sri Lanka Muslim

பரீட்சை கடமையில் ஈடுபடச் சென்ற அதிபர் திடீர் மரணம்

Contributors

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கடமையில் ஈடுபடுவதற்கு சென்றிருந்த அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவ மொன்று கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் பசுபதி கணேசமூர்த்தி (47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், கிளிநொச்சி, இராமநாதபுரம் மகா வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதற்கு சென்றிருந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 2.20 மணியளவில் தனது உடலில் ஏதோ செய்கின்றது எனக் கூறிய அதிபர், சில நிமிடங்களில் உயிரிழந்ததாக அருகிலிருந்தவர்கள் தெரி வித்துள்ளனர்.

இதேவேளை, இவருடன் இரவு உணவு உட்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி அதிபர் திங்கட்கிழமை இரவு உண்ட உணவு விஷமானதால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமோ என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team