பரீட்சை மண்டபத்திற்குள் முதலை - கிளிநொச்சியில் சம்பவம் - Sri Lanka Muslim

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை – கிளிநொச்சியில் சம்பவம்

Contributors

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாணவர்கள் அச்சத்தில் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறி அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்.

குறித்த பரீட்சை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கரும்பலகை ஒன்றுக்கிடையில் புகுந்து படுத்திருந்த முதளையை பரீட்சை ஆரம்பித்தபொழுதே அவதானித்த மேற்பார்வையாளர் மாணவர்களுக்கு தெரியப்படுத்தாது பரீட்சை முடியும்வரை அதனை அவதானித்தாவாறே இருந்தள்ளார்.
மாணவர்கள் பரீட்சை எழுதி முடிந்த பின்னர் மேற்பார்வையாளர் முதலை தொடர்பாக தெரியப்படுத்தியபோது மாணவர்கள் அச்சத்தினால் மண்டபத்தை விட்டு வெ ளியேறியுள்ளனர்.
இதன்பின்னர் கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் முதலையைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (virekesari)

Web Design by Srilanka Muslims Web Team