பருப்பிலும் புற்றுநோய்-இலங்கை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி. - Sri Lanka Muslim

பருப்பிலும் புற்றுநோய்-இலங்கை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.

Contributors

புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய எல்படோஸின் அடங்கிய பருப்புத் தொகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டம் வெலிகம பிரதேசத்தில் இந்த பருப்புத் தொகையானது, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் அரச பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய பரிசோதனைனயில் குறித்த பருப்பு வகையில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய கலவை இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது என்று வெலிகம பிரதான பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

அதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த 3000 கிலோ பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team