பற்றி எரியும் கப்பலில் இருந்து கரையொதுங்கும் சிதைவுகள்..! - Sri Lanka Muslim

பற்றி எரியும் கப்பலில் இருந்து கரையொதுங்கும் சிதைவுகள்..!

Contributors

கொழும்பு துறைமுகம் அருகில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் வெளிநாட்டுக் கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில சிதைந்த பொருட்கள் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் ஒதுங்கியுள்ளன.

இதற்கமைய நீர்கொழும்பு, ஜா-எல, கப்புகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் இவ்வாறு பொருட்களையும் எண்ணெய் சேர்ந்த நீரையும் காணமுடிவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய கடலோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை ஒன்றையும் நேற்று அரசாங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Web Design by Srilanka Muslims Web Team