பலஆயிரம் மக்கள் ஒன்று கூடி அல்துல்லாஹ் ஹஸ்ரதின் ஜனாசா நல்லடக்கம் (Photo) » Sri Lanka Muslim

பலஆயிரம் மக்கள் ஒன்று கூடி அல்துல்லாஹ் ஹஸ்ரதின் ஜனாசா நல்லடக்கம் (Photo)

abbd

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(முகம்மட் சஜீ)


சங்கைக்குரிய மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்’அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்களின் ஜனாஸா இன்று மாலை (13) ஆயிரக் கணக்கான மக்களின் பங்கேற்புடன் காத்தான்குடியில் அடைக்கம் செய்யப்பட்டது.

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்’ எம்.ஏ.அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்கள் நேற்று மாலை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கல்லூரியில் தமது 84 வது வயதில் காலமானார்கள்.

தென்னிந்தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினத்தில் 21.03.1932 இல் பிறந்தார்கள்.இவர்களின் தந்தை அல்லாமா அல்ஹாஜ் முகம்மது அபூபக்கர் ஆலிம் ஆவார்கள்.

இப்பெரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹரகம மத்ரஸதுல் கபூரிய்யா அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்கள்.1955 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி பின்னர் இந்தியாவில் கீழ்க்கரை காயல்பட்டினம் போன்ற இடங்களில் கல்விப் பணியாற்றினார்கள்.

பின்னர் 05.01.1955ல்இல் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்மது அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்கள் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதிபராக காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ்வில் கடமையைத் தொடர்ந்த அவர்கள் பின்னர் மரணிக்கும் வரை அதன் ஆயுள்காலத்தலைவராக செயற்பட்டார்கள்.

இவர்களின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி ஜாமியுலாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை இடம் பெற்று காத்தான்குடி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஜாமியுலாபிரீன் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இறுதிக்கிரிகைகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

ab6-jpg2 ab6-jpg2-jpg5 ab6-jpg2-jpg5-jpg9 ab6-jpg2-jpg6 abb

ab6-jpg2 ab6-jpg2-jpg5 ab6-jpg2-jpg5-jpg9 ab6-jpg2-jpg6

 

Web Design by The Design Lanka