பலமடையும் அமீரக – இஸ்ரேல் உறவு : இஸ்ரேலுக்கான முதலாவது ஐக்கிய அரபு அமீரக தூதுவர் நியமனம்! - Sri Lanka Muslim

பலமடையும் அமீரக – இஸ்ரேல் உறவு : இஸ்ரேலுக்கான முதலாவது ஐக்கிய அரபு அமீரக தூதுவர் நியமனம்!

Contributors

ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்ரேலுக்கான முதலாவது தூதுவர் முஹம்மத் மஹ்மூத் அல் காஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை அமீரகத்தின் பிரதி அதிபரும், பிரதமரும் மற்றும் டுபாயின் ஆட்சியாளருமான ஷெய்க் முஹம்மத் பின் ராசித் அல் மக்தூம் இன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து மேற்படி பதவிப்பிரமாணத்தை அவர் செய்து கொண்டார்.

மேலும் டொமினிக்கன் குடியரசின் அமீரகத்திற்கான புதிய தூதுவர் மற்றும் பாகிஸ்தானின் அமீரகத்திற்கான புதிய தூதுவர் ஆகியோரது நியமனங்களுக்கான ஆவணங்களையும் ஷெய்க் முஹம்மத் பின் ராசித் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (RH)

Web Design by Srilanka Muslims Web Team