பலஸ்தீனர்களின் 40 பூர்வீக கிராமங்களை அழித்து யூத நகரங்களை அமைக்கிறது இஸ்ரேல் - Sri Lanka Muslim

பலஸ்தீனர்களின் 40 பூர்வீக கிராமங்களை அழித்து யூத நகரங்களை அமைக்கிறது இஸ்ரேல்

Contributors

இஸ்ரேல் இனவாத ஆக்கிரமிப்பு அரசு   அரபு முஸ்லிம்களின்   கிராகளை ஆக்கிரமித்து அவர்களை வெளியேற்றி  அங்கு  யூத நகரத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலை மையமாகக் கொண்டு

 

இயங்கும்மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. தெற்கு இஸ்ரேலின் நிகெவ் பாலைவனப் பகுதியில் கசில் மற்றும் ஹிரான் என்ற இரு யூத நகரங்களை நிறுவ இஸ்ரேல் அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கீகாரம்  அளித்துள்ளது .

இதன்முலம் நிகெவ் பகுதியில் இருக்கும் அல் ஹிரான் கிராம மக்களை வெளியேற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் அரபு உரிமை அமைப்பான அதலாஹ்வின் இயக்குனர் சுஹாத் பிஷரா குறிப்பிட்டுள்ளார். அரபு மக்களை   வெளியேற்றுவதன் முலம் இஸ்ரேலின் இனவாத கொள்கை வெளிச்சத்திற்கு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இஸ்ரேலின் திட்டத்திற்கமைய குறித்த பகுதியில் வாழும் 30,000- 40,000 அரபு குடியிருப்பாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப் படவுள்ளனர் . அதேபோல் அங்கிருக்கும் சுமார் 40 கிராமங்களும் அகற்றப்பட்டு 70,000 க்கு அதிகமான ஹெக்டேயர் கொண்ட நிலப் பகுதியை பறிமுதல் செய்ய கடந்த ஜனவரியில் இஸ்ரேல் பாராளுமன்றம் அனுமதி அளித்திருந்தது. தற்போது அதற்கான நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலின் பயங்கரவாத அரசியல் வாதியான அவிக்டோர் லிபர்மான் மீண்டும் வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ளார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசியின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசின் முன்னணி கட்சியான பயங்கரவாத கட்சியான  யிஸ்ரால் பைட்னு கட்சியின் தலைவரான லிபர்மான்  இஸ்ரேல்- பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பயனற்றது என்று தெரிவித்து வருகிறார்

மத்திய கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டுவது சாத்தியமில்லை என கூறிவரும் லிபர்மான் இஸ்ரேலின் அரபு பிரஜைகளை பலஸ்தீன கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பவேண்டும் எனவும் கூறியவராவார். அதேபோன்று பலஸ்தீன நிர்வாகத்தை கலைத்துவிட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலைப்பாட்டிலுள்ள இவர் மூண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team