பலஸ்தீன் மக்களுக்காக ஜே.வி.பி. போராட்டம். - Sri Lanka Muslim

பலஸ்தீன் மக்களுக்காக ஜே.வி.பி. போராட்டம்.

Contributors

asraf A. samad

சர்வதேச பலஸ்தீன் நட்புறவு தினமான இன்று நவம்பர் 29ஆம் திகதி மக்கள் விடுதலை முன்ணனியின்  சோஷலிச இளைஞர் சங்கம்  மருதாணை ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கையெழுத்து வேட்டையும் பலஸ்தீனத்து மக்களை சுதந்திரமாக வாழவிடு என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புக்களையும்  தெரிவித்தனர்.
இந் நிகழ்வு முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஆப்தீன் பலஸ்தீன் நாட்டு தூதுவர் கலாநிதி  அன்வர் அல்.அகா ஆகியோறும் கலந்து கொண்டனர்.
இப் பேரணி கொழும்பில் மட்டுமல்ல  கண்டி, குருநாகல், களுத்துறை போன்ற 35 இடங்களில் இன்று ஜும்ஆப் பள்ளிவாசலில் ஒழுங்கு செய்து ஜே.வி.பி யினால் நடாத்தப்படுகின்றன. அத்துடன் பலஸ்தீன் நாட்டில் உள்ள மாணவர் அமைப்புடன் இனைந்து இந் நிகழ்வுகளை எதிர்காலத்திலும் எமது அமைப்பு நாடாளாரீதியில் நடாத்தத் திட்டமிட்டுள்ளது. பலஸ்தீன மக்களின் சுதந்திரத்திற்காக தாம் மாபெரும் கையெழுத்து வேட்டை நடாத்துவதாகவும் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

 

jvp3
விமல் ரத்நாயக்க  அங்கு மேலும் உரையாற்றும் போது-  இந்த நாட்டில் யார் முதலில் குடியேறியவர் அல்லது முதலில் பிறந்தவர் என்ற பாகுபாடுகள் எமது கட்சிக்குள் இல்லை.  எங்கெங்கெல்லாம்  சாதாரண மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அவர்களுக்கு சார்பாக நாம்  கட்டாயம் குரல்கொடுப்போம். அத்துடன் எமது எதிர்ப்பையும தெரிவிப்போம்.
அரசாங்கத்தில்  உள்ளவர்கள் சிலர் சிறு சிறு இனவாத குழுக்களையும் மதவாத அமைப்புக்களையும்  வைத்துக்கொண்டு இனவாதத்தை தூண்டி  அரசியல் இலாபம் செய்து வருகின்றனர்.
பலஸ்தீன மக்களின் சுதந்திரத்தை மட்டுமன்றி அடிப்படை மனித உரிமைகளையும் துண்டிக்கப்பட்டு நடாத்தும் இஸ்ரேவேல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள் உக்கிரமடையச் செய்துள்ளதுடன் பலஸ்தீன மக்களுக்கு தேவையான உணவு உடை மற்றும் வாகணங்களைக் கூட தாக்கும்  நிலை அங்கு காணப்படுகின்றது. எமது இயக்கம் நாடாளரீதியில் பலஸ்தீன மக்களை நிம்மதியாக வாழவிடு என்ற கோசத்தின் கீழ் பல்வேறு போராட்டடங்களை நடாத்த உள்ளோம். எனவும் விமல் ரத்நாயக்க தெரிவித்தார். (vidi)

 

jvp1

 

Web Design by Srilanka Muslims Web Team