பலாங்கொட கூரகல தஃப்தர் ஜெய்லானி சர்ச்சை..! - Sri Lanka Muslim

பலாங்கொட கூரகல தஃப்தர் ஜெய்லானி சர்ச்சை..!

Contributors
author image

Editorial Team

தற்போது இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், சிலர் தாம் ஸியார வணங்கிகள் அல்ல எனக்கூறி நழுவிடப் பார்க்கின்றனர். ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இலங்கையில் இஸ்லாம் நிலைத்திருக்கக் காரணம் அதே ஸியார வணங்கிகள் தான் என்பதை அவர்கள் மறந்தாயிற்று.

நான் அதில் நம்பிக்கை கொள்ளாத போதும், அம்மக்களின் பாரம்பரிய நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது உரிமைக்காகக் குரலெழுப்ப வேண்டிய நிலையிலுள்ளேன். முன்னர் ஒரு தடவை நான் அங்கு சென்று வீடியே ஒன்றையும் தயாரித்து வெளியிட்டிருந்தேன். கூரகல என்பது, முஸ்லிம்களுக்கென ஒரு வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இடம். அவ்விடம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கக் காரணம் அக்காலத்தில் கண்டியை ஆட்சி செய்த மன்னன். என்றாலும், அதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் முன்பிருந்தே காலி துறைமுகத்திலிருந்து முஸ்லிம்கள் வந்து போயுள்ளனர்.

நான் இவ்விடத்தில் கேட்டுக்கொள்வது, அப்பாரம்பரிய முஸ்லிம்களின் உரிமையில் அக்கறை இல்லாதோர் அமைதியாக இருக்கும்படியும், அக்கறையுள்ளோர் அவர்களது உரிமைக்காக முன்வருமாறும் ஆகும்.

-அன்வர் மனதுங்க-

Web Design by Srilanka Muslims Web Team