பல்கலைக்கழகங்களில் காணப்படும் பண மோசடிகளை தடுக்க நடவடிக்கை - Sri Lanka Muslim

பல்கலைக்கழகங்களில் காணப்படும் பண மோசடிகளை தடுக்க நடவடிக்கை

Contributors

தவறான முகாமைத்துவ தீர்மானம் மற்றும் விரயம் காரணமாக பல்கலைக்கழகங்களில் ஏற்படும் நிதி நட்டத்தை, அதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிடவுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

கணக்காய்வாளருக்கு காணப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் எச்.ஏ.எஸ்.சமரவீர தெரிவித்தார்.

பல்கலைக்கழங்கள் சிலவற்றில் தற்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பண மோசடி மற்றும் விரயம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்தது.nw

Web Design by Srilanka Muslims Web Team