பல்கலைக்கழக பிரச்சினைக்கு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்வில்லை! - Sri Lanka Muslim

பல்கலைக்கழக பிரச்சினைக்கு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்வில்லை!

Contributors

பல்கலைக்கழக கல்வி தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்க்க இம்முறை வரவு-செலவுத் திட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 

நாட்டின் எதிர்கால நோக்கு மற்றும் கல்வியின் பெறுமதி, தரம் குறித்தும் அதில் மாற்றங்கள் செய்வது குறித்தும் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.

இதேவேளை, வரவு-செலவுத் திட்டத்தில் தமக்கும் எதுவித நிவாரணமும் கிடைக்கவில்லை என அனைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்தார்.

பல்கலைக்கழக விடுதிகளை அமைப்பதற்கும் புதிய கற்கைநெறிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் நேற்றைய வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும் நேற்றைய வரவு-செலவுத் திட்டத்தில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விக் கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் 5% அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team