பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியினை இந்த வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை - Sri Lanka Muslim

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியினை இந்த வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை

Contributors
author image

Editorial Team

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்குரிய பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் இந்த வாரத்திற்குள் வெளியிப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கான புதிய மாணவர்களை ஒக்டோபர் மாதம் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவிக்கின்றார்.

 

ஏனைய பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள தலைமைத்துவ பயிற்சியின் முதல்கட்ட பயிற்சிக்காக 10,000 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது. இதற்கான அழைப்பு கடிதங்கள் குறித்த மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team