பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! - Sri Lanka Muslim

பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Contributors
author image

Editorial Team

கண்டியில் உள்ள பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரியும் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட எழுமாறான பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டார். அவரது நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 10 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக பல்லேகல பொலீசார் தெரிவித்தனர்.
பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் ஒரு சோதனைத் தொடரில் ஈடுபட்டுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுடன் இக்குழுவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

இந்த கண்டறிதல் கிரிக்கெட் அணிகளுக்கோ அல்லது போட்டிகளுக்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team