பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுபலசேனா - பிரதமர் சந்திப்பு - Sri Lanka Muslim

பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுபலசேனா – பிரதமர் சந்திப்பு

Contributors

சிங்கள பௌத்த அமைப்பான பொதுபலசேனா அமைப்பு, பிரதமர் டி.எம் ஜயரட்னவை இன்று நண்பகல் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொம்பனித்தெருவில் அமைந்துள்ள பிரதமர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பொதுலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று, பிரதமரை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருள் அடங்கி கொள்கலன் மீட்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் கட்சியின் தலைவரை இழிவுபடுத்தியதாகவும் பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால் பல பில்லியன் ரூபா நட்ட ஈடு வழக்குத் தொடர உள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.(lw)

Web Design by Srilanka Muslims Web Team