பல வருடங்களுக்கு பிற்பாடு கொங்றீட் வீதியாக மாற்றப்படும் ஓட்டமாவடி மருங்கைக்கேனி (MK) வீதி... - Sri Lanka Muslim

பல வருடங்களுக்கு பிற்பாடு கொங்றீட் வீதியாக மாற்றப்படும் ஓட்டமாவடி மருங்கைக்கேனி (MK) வீதி…

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஓட்டமாவடி 3ம் வட்டாரதையும் 2ம் வட்டாரத்தையும் பிரிக்கின்ற பிரபல்யமான எல்லை வீதியான மருங்கைக்கேனி (MK) வீதி கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் பவருடங்களாக புணர்நிர்மானம் செய்யப்படாததின் காரணமாக இவ்வீதியின் இருமருங்கிலும் வசிக்கின்ற மக்கள் அனைவரும் மழைகாலங்களில் பல அசெளகரியங்களுக்கு உள்ளக்கப்படுகின்றனர்..

 

மிகவும் பழமையும், பிரபல்யமும் கொண்ட இந்த வீதியில் கூடுதலாக ஆசிரியர்களும், நிருவாக உத்தியோகத்தர்களும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற மூன்று வைத்தியர்களும், கூடுதலாக பள்ளி செல்லும் மாணவர்களும் முக்கியமாக வசிப்பதானதும் அதிலும் முக்கியமாக இரவு பகல் என்று பாராது இவ்வீதியானது என்நேரமும் மக்கள் போக்குவரத்துக்கு பயண்படும் வீதியாக கானப்படுவது இங்கு குறிப்பிடதக்க விடயமாகும். மழைகாலங்களில் மழை நீர் அதிகம் தேங்கிநிற்பதன் காரணமாக இவர்கள் தங்களுடைய கடைமக்குகு செல்லும் போது பல அசெள்கரியங்களை சந்தித்தவர்களாகவும் கானப்படுகின்றனர்.

 

மக்களுக்கு பெரும் இடஞ்சாலாக காணப்படுகின்ற இவ்வீதியில் அன்டி வசிக்கின்ற மக்களின் பெரும்குறையாக பலவருடங்காக காணப்பட்ட 220 மீற்றர் நீளமுடைய இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்மேற்பார்வையின் கீழ் முதற்கட்டமாக 43 மீற்றர் நீளமுடைய வீதிக்கு வடிகனுடனான கொங்றீட் இடுவதற்கான வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

ஆனாலும் துண்டு துண்டாக செய்யப்படுவதனால் அதிகம் நீர் தேங்கும் இடங்களில் உள்ள மக்கள் எதிவருகின்ற மழைகாலத்தில் என்றும் இல்லாதவாறு பெரும் அசெளகரியத்துக்கு உள்ளாகப்படுவார்கள் என்ற காரணத்தினால் இவ்வீதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த முடிவுடன் அதிகமாக குறிப்பிட்ட பிரதேச மக்களின் நன்மை தீமைகளில் கலந்து கொள்கின்ற ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

 

 உடநடியாக ஒன்று கூடலின் மூலம் இவ்வீதியில் வசிக்கின்ற பிரதேச மக்களை சந்தித்த பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மி அவர்கள் இதற்கு பொறுப்பான பொறியியலாளரையும், தொழில்நுட்ப அதிகாரியையும், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பனிப்பாளர் றுவைத் அவர்களையும் உடநடியாக தொடர்பு கொண்டு வீதிக்கு வரவழைத்து மக்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு யாருக்கும் அசெளகரியம் ஏற்பாடத முறையில் நிர்மாணப்பனியினை தொடங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

 

 மேலும் முழு வீதியையும் மிக விரைவில் நிறைவேற்றி தருவதற்கு உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனையிட்டு சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததுடன்  பிரதேச சபை உறுப்பினர் IT.அஸ்மிகு தங்களது நன்றியினையும் தெரிவித்தனர்.   

 

25

 

20

 

21

 

22

 

23

 

24

 

 

Web Design by Srilanka Muslims Web Team