பள்ளிச் சொத்து » Sri Lanka Muslim

பள்ளிச் சொத்து

mosque

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


பலசேனா வெளியிருந்து
பள்ளியினைத் தாக்குகிறான்
சில சோனி உள்ளிருந்தே
செல்லாக அரிக்கின்றான்.

அப்பாட காலத்திலே
ஐம்பதுக்கு எடுத்த கடை
இப்போதும் அத்தொகையே
இவன் கொடுப்பான் பள்ளிக்கு.

எண்பது கடை வீடு
இருக்கின்ற பள்ளியொன்று
கொழும்பிலே இருக்கிறது
கொடுக்கின்ற வாடகையோ
ஐம்பதோ நூறோதான்
ஆட்சியுரிமை பேசுகிறார்.

பள்ளிக்கு சொந்தமான
பல பேர்ச்சஸ் மையவாடி
மெல்லக் குறைவடையும்
எல்லையிலே உள்ளவர்கள்
சொல்லாமல் வேலியினை
உள் நோக்கி நகர்த்திடுவார்.

பள்ளிக்கு நன்கொடையாய்
அள்ளிக் கொடுப்பார்கள்.
குள்ள நரி ஒன்றிரன்டு
சொல்லாமல் அப்பணத்தை
சொந்தக் கணக்கிலிட்டு
தந்திரமாய் றோள் செய்வார்.

சிங்ஹலே ஆட்களிலும்
சிஹல உருமயிலும்
எங்களின் சில ஆட்கள்
இழிவாக நடக்கின்றார்.
தங்களின் மரணத்தில்
தவிக்கின்ற போதினிலே
இங்கு இவர் செய்த
இத்தகைய பாவங்கள்
சங்கை அறுக்கும்.
சத்தியம் விளங்கும்.

Web Design by The Design Lanka