பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட 16 வயதுடையவர் சிங்கப்பூரில் கைது..! - Sri Lanka Muslim

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட 16 வயதுடையவர் சிங்கப்பூரில் கைது..!

Contributors
author image

Editorial Team

2019 இல் நியுசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை திட்டமிட்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிறைஸ்சேர்ச் மசூதி படுகொலைகள் நினைவுதினத்தின் போது ( மார்ச்) அவர் இரண்டு மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள கைதுசெய்யப்பட்ட இளைஞன் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் வேறு எவரினதும் உதவியின்றி தன்னை தானே தீவிரவாதமயப்படுத்தியுள்ளார்,என தெரிவித்துள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் இஸ்லாம் மீதான வெறுப்பும் வன்முறை மீதான காதலும் இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த புரொட்டஸ்தாந்து பிரிவை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு தீவிரவலதுசாரி கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டமைக்காக சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்ட முதல் நபர் இவர் எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபர் அஸ்யபா மசூதி மற்றும் யூசுவ் இசாக் மசூதிகள் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவி;த்துள்ளனர்.

அவரின் தாக்குதல்கள் நியுசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல்களை அடிப்படையாக கொண்டவையாக காணப்பட்டன கைதுசெய்யப்பட்ட இளைஞன் நியுசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவரின் நேரடி ஒலிபரப்பை பார்வையிட்டுள்ளார் என சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளன

Web Design by Srilanka Muslims Web Team