பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் - Sri Lanka Muslim

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம்

Contributors

-சர்ஜூன் ஜமால்தீன்-

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் ஒன்று தெஹிவளை மஸ்ஜிதுல் சமா பள்ளிவாசலில்(2013-12-19) நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்றிரவு தெஹிவளை கடவத்தை வீதியில் அமைந்துள்ள பள்ளிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் பள்ளி வாசல்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பில் முடிவுகள் பெறப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றன.

இக்கலந்துரையாடலில் பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் பிரதமரிடம் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதற்கு ஏகமனதான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

பிரதமரிடம் முறைப்பாடு செய்யும் அதே வேளை ஜனாதிபதியிடம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான றவுப் ஹகீம் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்  அசாத் சாலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்ஆகியோர் பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்ததுடன் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் பல விடயங்களை வலியுறித்தினர்.
ஆரம்பத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளிடையே கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றாலும் பின்னர் இங்கு ஏகமனதாக தீர்மானங்கள் பெறப்பட்டன.

கடந்த சில நாட்களாக தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவந்தன. இதன் உச்ச வெளிப்பாடாக நேற்றிரவு தெஹிவளை கடவத்தை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் ஒன்று இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காகவே இக்கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.

இக் கலந்துரையாடலில் அமைச்சர்களான றவுப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பௌசி, மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா ,கிழக்கு முதல்வர் நஜீப் ஏ மஜீத், அசாத் சாலி, முஜீபுர் ரஹ்மான், என எதிர்க்கட்சி ,ஆளும் கட்சிகளில் உள்ள அதிகமான முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ,கல்வி மான்கள் மற்றும் மார்க்க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது விஷேட அம்சமாகும்.

 

Web Design by Srilanka Muslims Web Team