பழிவாங்கப்படும் கல்முனை பிரதிமேயர் - Sri Lanka Muslim
Contributors

-ஜெஸாத்-
கல்முனை மாநகர சபையில் பிரதி முதல்வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரத்தியேக அறை தற்போதைய பிரதி முதல்வர் சிராஸ் மீராசாஹிபிற்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய முதல்வர் நிசாம் காரியப்பர் பிரதி முதல்வராக இருந்தபோது ஆணையாளரின் அறைக்கு முன்பாக பிரத்தியேக அறை வழங்கப்பட்டிருந்தது. அவ்வறையில் குளிரூட்டி (ஏசி)இ சோபாஇ பிரத்தியேக தொலைநகல் (பெக்ஸ்) மற்றும் இணைய இணைப்புஇ கணணிஇ பிறின்டர்இ ஸ்கேனர் என சகலவிதமான வசதிகளும் முன்னாள் முதல்வர் சிராஸினால் வழங்கப்பட்டிருந்தது.

 
தற்போது அவ்வறையில் இருந்த சகல பொருட்களும் அகற்றப்பட்டு ஒரு மேசை கதிரை மாத்திரம் உள்ள ஒரு வெற்று அறையாக காணப்படுகிறது. அவ்வறையின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்ட ‘பிரதி முதல்வர்’ என்ற பெயர்ப் பலகையும் உடைத்து வீசப்பட்டுள்ளது.

 
நிசாம் காரியப்பர் பிரதி முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அறை தொடர்பில் நன்கு அறிந்தவராக இருந்து கொண்டு தற்போதைய பிரதி முதல்வருடன் இவ்வாறு நடந்து கொள்வது நாகரீகமான செயல் அல்ல.

 
கல்முனை மாநகர சபையானது பிரதேச சபையாக காணப்பட்ட காலப்பகுதியில் இருந்து பிரதி தவிசாளர்களுக்கு பிரத்தியேக அறை வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

kalmunai meyar palivankal

Web Design by Srilanka Muslims Web Team