பஷீர் சேகுதாவூத் எதிர் ஜனாதிபதி காரியாலயம் » Sri Lanka Muslim

பஷீர் சேகுதாவூத் எதிர் ஜனாதிபதி காரியாலயம்

as

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இன்றைய “ஜனயுகய” என்ற சிங்கள வாராந்திரப் பத்திரிகையில் வெளியாகியுள்ள எனது நேர்காணல் கீழே!

எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 10 மணிக்கு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் நேரடி வாய் மூல முறைப்பாட்டிற்காக ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளேன்.

முன்னர் நான் அனுப்பியிருந்த எழுத்து மூல விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக, மேலும் ஒரு எழுத்து மூல அறிக்கையை நேரடி முறைப்பாடு அளிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னராக தமக்கு சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவினால் கேட்கப்பட்டிருக்கிறேன். இதற்கிணங்க எனது வழக்கறிஞர் தயாரித்த அறிக்கையை இன்ஷா அழ்ழாஹ் நாளை சமர்ப்பிக்க உள்ளேன்.

அஷ்ரஃப் சேரின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த முடிந்தால், அண்மைய எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள இருக்கும் அரசியல் விபத்துக்களைத் தடுக்கும் திராணியுள்ள ஒரு திண்ணிய கவசமாக அவ்வறிக்கை திகழும்.

பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களையும், முஸ்லிம் சமூகத்தையும் நேசிக்கும் அனைவரும் துஆச் செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

as

Web Design by The Design Lanka