பஸ்ஸில் அமர்ந்திருந்த பெண் சடலமாக மீட்பு - உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிய நடத்துனர்..! - Sri Lanka Muslim

பஸ்ஸில் அமர்ந்திருந்த பெண் சடலமாக மீட்பு – உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிய நடத்துனர்..!

Contributors

ஹொரணயிலிருந்து பாணந்துறைக்கு பயணித்த பஸ்ஸில் பெண் ஒருவர் தனது ஆசனத்தில் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார் என, பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், ஆசனத்தில் உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிய நடத்துனர், பெண்ணின் வாய் திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து, பஸ்ஸை பாணந்துறை  வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் 60 அல்லது 65 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணைப் பற்றி தங்களுக்கு இன்று இரவு வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team