பஸ் மற்றும் ஆட்டோக்களுக்கு தனி QR குறியீடு! - Sri Lanka Muslim

பஸ் மற்றும் ஆட்டோக்களுக்கு தனி QR குறியீடு!

Contributors

பொதுப் போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளின் அளவைக் கண்டறிந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ மற்றும் எரிபொருள் நிலையங்களில் இருந்து தனி QR குறியீட்டின் மூலம் எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ மற்றும்  பஸ்டியன் மாவத்தையில் (Bastian mawatha) அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team