பஸ் விபத்தில் 11 பேர் பலி; 26 பேர் படுகாயம் - Sri Lanka Muslim

பஸ் விபத்தில் 11 பேர் பலி; 26 பேர் படுகாயம்

Contributors

பண்டாரவளையிலிருந்து பூணாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் பலியானதுடன் 26இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.

பலியானவர்களில் மூவர் பெண்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

காலநிலை சீர்கேடு மற்றும் பள்ளத்தின் நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் காயமடைந்தவர்களை தேடிக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீட்பு பணிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team