பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதி நியமனம்! - Sri Lanka Muslim

பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதி நியமனம்!

Contributors

-bbc-

பாகிஸ்தானின் புதிய இராணுவத் தளபதியாக ஜெனரல் ரஹீல் ஷரீஃப் அறிவிக்கப்பட்டுள்ளார்.  நாட்டில் அதிகாரம் நிறைந்த, மிகவும் முக்கியமான ஒரு பதவிக்கு அவரை நியமிக்கும் அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இன்று வெளியிட்டது.

 

கடந்த ஆறு ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்த ஜெனரல் அஷ்ஃபக் கயானி ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தளபதியாக ஜெனரல் ஷரீஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.  காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான ஜெனரல் ஷரீஃப் ஒரு மிதவாதியாகப் பார்க்கப்படுகிறார்.

நாட்டுக்குள்ளே தாலிபான்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், பிராந்திய எதிரியான இந்தியாவிடமிருந்து எந்த அளவுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதோ அந்த அளவுக்கு பெரிய அச்சுறுத்தலான விஷயம் என பாகிஸ்தான் இராணுவத்தை இணங்க வைப்பதில் ஜெனரல் ஷரீஃப் ஒரு முக்கிய பங்காற்றினார் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் இராணுவத்தின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ரஹீல் ஷரீஃப் நாளை-வியாழக்கிழமை முறைப்படி பொறுப்பேற்கவுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team