பாகிஸ்தானில் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுகின்றது- சர்வதேச மன்னிப்புச் சபை - Sri Lanka Muslim

பாகிஸ்தானில் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுகின்றது- சர்வதேச மன்னிப்புச் சபை

Contributors

பாகிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் சட்டரீதியற்ற கொலைகள் இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதில் சில யுத்தக் குற்றங்களாக அமையலாம் எனவும் சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கு வரிஸ்தான் பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்து மீளாய்வு செய்துள்ளதாக மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தாக்குதல்களில் ஆயுதமற்ற சிலரும் கொல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே யேமனில் நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இரண்டு சிவிலியன்களும் அடங்கியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறும் ஒன்றெனவும் கண்காணிப்பம் கூறியுள்ளது.

அல் கைய்தா மற்றும் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொள்வது பொதுவான ஒர் நடவடிக்கையாக மாற்றியுள்ளது.

இந்த தாக்குதல்களில் அல் கைய்தா மற்றும் தலிபான் இயங்கங்களின் சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சிவிலியன்களும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்டும் கண்மூடித்தனமான உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் காரணமாக பாகிஸ்தானில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team