பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கைது - Sri Lanka Muslim

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கைது

Contributors
author image

World News Editorial Team

சென்னையில் பாகிஸ்தான் உளவாளி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதனிடையே மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டது போன்று சென்னையிலும், நாசவேலைக்கு திட்டம் தீட்டியுள்ளனர் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.  

 

சென்னையில் பாகிஸ்தான் உளவாளிகள் ஜாகீர்உசேன் உள்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் ஆகியவற்றை குண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியது. ஜாகீர் உசேன் இலங்கையை சேர்ந்தவர். மேலும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

 

முதலில் இந்த வழக்கை கியூ பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மேலும் ஒருவரை நேற்று இரவு கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட அந்த உளவாளியின் பெயர் அருண் செல்வராசன் என்பதாகும். இவரிடம் இருந்து 2 பாஸ்போர்ட்டுகள், லேப்–டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையில் முக்கிய இடங்களை உளவு பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அருள் செல்வராசன் பல்வேறு தகவல்களை திட்டியிருக்கிறார்.

 

ஒரு சில இடங்களில் தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னையில்  திரட்டிய தகவல்களை இணைய தளம் வழியாக பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு அருள் செல்வராசன் அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் சென்னையில் பெரிய அளவில் நாச வேலைக்கு அவர் திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. செல்வராசன் மீது இலங்கையிலும் வழக்குகள் இருப்தாக கூறப்டுகிறது. இலங்கை போலீசாரும் அவரை தேடிவந்துள்ளனர். இந்நிலையில் அவர் சென்னையில் பிடிட்டுள்ளார். அவரை இன்று (வியாழக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்த போவதாக தேசிய புலனாய்வு போலீசார் தெரிவித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடலோர மையங்கள், தமிழ்நாடு ராணுவ பயிற்சி மையம் மற்றும் ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினம் கடற்படையை புகைப்படம் எடுத்துள்ளார். என்று தேசிய புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன. 26/11 தாக்குதல் போன்று தமிழ்நாட்டிலும் நாசவேலையில் ஈடுபட பயன்படும் வகையில் புகைப்படங்களை செல்வராசன் திரட்டி இருக்கலாம் என்று தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் பாகிஸ்தானை சேர்ந்த டேவிட் காலிமென் கெட்லி என்பவரால் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. அவன் தற்போது அமெரிக்கா சிறையில் உள்ளான்.
 
ஸ்கைப் மற்றும் வைபர் மூலம் கொழும்பில் உள்ள பாகிஸ்தானியர் ஒருவருக்கு தகவலை கொடுத்துக் கொண்டு இருந்துள்ளார். செல்வராசனுக்கு இதற்கு ரூ. ஒரு லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் உள்ள பாகிஸ்தானியரின் ஏ.டிம்.எம். கார்டை செல்வராசன் பயன்படுத்தி வந்துள்ளார் என்று இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team