பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 302 » Sri Lanka Muslim

பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 302

Contributors

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 302 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்ஜாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி அதன் முதல் இனிங்ஸில் 341 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸ்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

Web Design by Srilanka Muslims Web Team