பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணி: மஹேல, ஹேரத் நீக்கம் - Sri Lanka Muslim

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை அணி: மஹேல, ஹேரத் நீக்கம்

Contributors

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியில் மஹேல ஜயவர்தன கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இலங்கை குழாமில் சூழற்பந்துவீச்சாளர் ரங்ஹன ஹேரத்தும் இணைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் ஆரம்மாகவுள்ளதுடன், இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகள் இரண்டிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளன.

இருபதுக்கு-20 போட்டிகளுக்கான 14 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாமில் சீக்குகே பிரசன்ன மற்றும் கித்றுவான் விதானகே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

2014 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காக கொண்டு சூழற்பந்துவீச்சாளர் ரங்ஹன ஹேரத் குழாமில் பெயரிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன இணைத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்கான போட்டிகளில் இருந்து விலக்களிக்குமாறு மஹேல ஜயவர்த்தன கோரிக்கை விடுத்ததன் காரணமாக அவர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சீக்குகே பிரசன்ன மற்றும் கித்றுவான் விதானகே ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அஷான் பிரியஞ்ஜனவிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team