பாகிஸ்தான் அரசின் உதவியை பெற தகுதியானோர்களை இனங்காண கிழக்கில் எழுத்துப்பரீட்சை !!! - Sri Lanka Muslim

பாகிஸ்தான் அரசின் உதவியை பெற தகுதியானோர்களை இனங்காண கிழக்கில் எழுத்துப்பரீட்சை !!!

Contributors

நூருள் ஹுதா உமர்.

பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை இன்று (17) காலை மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம் போன்ற துறைகளில் கல்விபயில இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாவும் இதற்கான முழு செலவுகளும் பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கையின் பல்லினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் பயன் பெற்றுள்ளனர் என பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் வஸீம் காலிக் டாட் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக கிழக்கில் முதல் முறையாக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைய உயரதிகாரிகளினால் நேரடியாக நடத்தப்பட்ட இந்த பரிட்சையில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 150 பேரளவில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் உயஸ்தானிகர் ஆலய உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team