பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை: பணம் – பாஸ்போர்ட்டும் பறிபோனது - Sri Lanka Muslim

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை: பணம் – பாஸ்போர்ட்டும் பறிபோனது

Contributors

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கின் வீடு லாகூரில் உள்ளது. நேற்று அதிகாலை குளியலறை ஜன்னல் வழியாக இவரது வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர்.

வீட்டினுள் இருந்த இரும்பு லாக்கரை உடைத்து திறந்தால் சத்தம் கேட்கும் என யூகித்து லாக்கரையே ‘அபேஸ்’ செய்த கொள்ளையர்கள் முன்வாசல் வழியாக வெளியேறினர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக லாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள அப்துல் ரசாக், ‘லாக்கரின் உள்ளே சுமார் ஒரு கிலோ தங்கம், 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 2 ஆயிரத்து 500 பிரிட்டிஷ் பவுண்டுகள், சில ஆவணங்கள் மற்றும் என்னுடைய பாஸ்போர்ட்டும் இருந்தன’ என தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team