பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஒரு உலக சாதனை » Sri Lanka Muslim

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலும் ஒரு உலக சாதனை

saa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தொடர்ந்து ஐந்து டெஸ்டில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யாசிர் ஷா திகழ்ந்து வருகிறார். 31 வயதாகும் இவர் ஏற்கனவே குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அஸ்வின் 18 போட்டியில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் திரிமன்னே விக்கெட்டை வீழ்த்தியபோது குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை வக்கார் யூனிஸ் உடன் பகிர்ந்துள்ளார். வக்கார் யூனிஸ் 27 போட்டிகளில் 150 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Web Design by The Design Lanka