பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார். » Sri Lanka Muslim

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார்.

Contributors

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் அவர் இவ்வாறு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சற்றுமுன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில் அவரை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேரில் சென்று வரவேற்றார்.

இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Web Design by The Design Lanka