பாகிஸ்தான் வெற்றி: சமநிலையானது தொடர் - Sri Lanka Muslim

பாகிஸ்தான் வெற்றி: சமநிலையானது தொடர்

Contributors

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதனடிப்படையில் டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவுபெற்றுள்ளது.

வெற்றி இலக்கான 302 ஓட்டங்களை அஸார் அலியின் சதத்தின் உதவியுடன் கடந்து, வெற்றியை தன்வசப்படுத்தியது பாகிஸ்தான்.

அஸார் அலி 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததோடு போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.

சார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி அதன் முதல் இனிங்ஸில் 341 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸ்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 428 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team